Wednesday, October 21, 2009

வாசம்
நீ வாசம் செய்ய இடம் கேட்டாய்
இடம் எது என்று சொல்லுவதற்குள்
என் கண்ணில் குடியேறி விட்டாய்
என் இமைகளும் மூட மறுக்கின்றன_ எப்படியோ
என் தூக்கத்தை வாங்கி சென்று விட்டாய் ....

Wednesday, October 14, 2009

வலி
வாழ்கை என்றால் வலி இருக்கும்
வலியே வாழ்கை ஆனால்............

தேடல்

தேடல் இல்லாத வாழ்வில்
சந்தோசம் இல்லை
புரிதல் இல்லாத நட்பு
நிலைப்பது இல்லை ..........
நகைக்கின்றன
என் கல்லறை பூக்கள் எல்லாம்
உன்னை பார்த்து நகைக்கின்றன
ஏன் தெர்யுமா வாழ்கையை ரசிக்க
தெரியாத உனக்கு எதேற்கு
கவிதை என்று .....................

Thursday, October 8, 2009

கவிதை !

புலவரே, 'பத்துப் பாட்டு ' பாடு என்றேன்-
தொகை வேண்டுமென்றார்
'எட்டுத் தொகை' போதுமா எனக் கேட்க,
இல்லை. அது எனக்கு ' குறுந்தொகை' என்றார்.
ஓகோ 'ஐங்குறு நூறு' வேண்டுமோ என்றேன்.
நானூறு தருவீரோ என்றார்
அதுவும்
அக(த்தில்) நானூறு (காசோலை )
புற (த்தில் ) நானூறு (கருப்பு )
-மு.க. 1-10-1986

படித்ததில் ரசித்த கவிதைகள்

"மழையில் நனைந்துகொண்டே
வீட்டுக்கு வந்தேன்
'குடை எடுத்துப்
போகவேண்டியதுதானே'
என்றான் அண்ணன்
'எங்கேயாச்சும்
ஒதுங்கி நிக்கவேண்டியதுதானே'
என்றாள் அக்கா
'சளி பிடிச்சுக்கிட்டு
செலவு வைக்கப்போற பாரு'
என்றார் அப்பா
தன் முந்தானையால்
என் தலையை
துவட்டிக்கொண்டே
திட்டினாள் அம்மா
என்னையல்ல;
மழையை !"

Tuesday, September 29, 2009

பிரிவு

என் பிரிவு உனக்கு சந்தோசம்
எனக்கு வேதனை என்று உனக்கு தெர்யுமா
என்னுள் இருக்கும் உன் நினய்வுகளை
என்னை விட்டு போக சொல் _நான்
உன்னை விட்டு போகிறேன் .

வேதனை

பிறந்த போது என் தாய் பெற்ற வேதனையை _இன்று
உன்னிடத்தில் இருந்து பெற்று கொண்டு இருக்கிறேன்
கண்களால் என்னை சிற்பமாக செதுகினாய்
செதுக்கிய சிற்பத்தை சிதைத்து விடுகிறாய் .

நேசி

என்இதயம் வெள்ளை காகிதம் போல
அதில் எழுதியதை விட கசக்கி
எறிந்தவர் தான் அதிகம் என்றேன்
நான் எழுத்து கிறேன் என்றாய் எழுதவும் செய்தாய்
உன் உணர்வுகளை உளறல்களை உன் தேடல்களை
எனக்கா என்று எண்ணி நான் அகந்தை உடன் இருந்தேன்
இப்போது தான் புரிந்தேன் எனக்கில்லை என்று
அவளை யாவது உண்மையாக நேசி ........

எனக்காக

எனக்க்காக ஒரு கவிதை சொல் என்றேன்
சொன்னாய் நீயும்
படித்தேன் , ரசித்தேன் , மகிழ்ந்தேன்
பின்பு தான் தெரிந்தது _உன்
மனதில் உள்ளவளை நினைத்து
எனக்க்காக எழுதியது என்று ............

(சு)வாசம்

உன் வாசம் என் இதயத்தில் என்றுஇருந்தேன்
என் (சு)வாசத்தை மறந்து _என் இதயத்தை
கல்லறை ஆக்கியது ஏனோ ??????????????

வலி

உன் வார்த்தைகளின் வலி தெரியாது உனக்கு
lதெரிந்து இருந்தால் வார்த்தை என்னும் _முள்ளால்
கிறி ரண படுத்த மாட்டாய் ......

உன் நினைவு

என் உயிரில் கலந்து இருக்கும் நட்பே
உன் அன்பு மழையில் நனைவது ஒரு சுகம் தான்
உன் நட்புக்கு ஒரு ஜீவனாக நான் வாழ்வேன்
நீ தூரமாக இருந்தாலும் உன் எண்ணங்களின் அலைகள்
என் அருகில் தான் இருக்கின்றன _மறந்தாலும்
தொடர்ந்து வரும் நிழல் போல தொடருகிறது உன் நினைவு ,,,,,


நீ

என் இதயத்தில் தைத்த முள்

எப்பொழுதும் வருத்தி கொண்டு

இருக்கின்றது உன் நினைவு ...

கானல்நீர்

இவ் உலகில் ந்ம் நட்புதான்
நிலையானது என்று இருந்தேன்
வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து
வரும் என்று இருந்தேன்
கற்பை விட நட்பு புனிதம் என்று
ந்ம் நட்பை மதித்து இருந்தானே
ஆனால் நீயோ அதன் புனிதம்
தெரியாமல் அது வெறும் கானல் நீர்
என்பது போல ஆக்கி விட்டாய்
என்று அதை உனோர்வயோ என் உயரிரே

இமைகள்

அன்பே நான் கண் இமைக்க மறந்தேன் என்றாய்
என் என்று கேட்டதற்கு உன் கண்ணில்
இருக்கும் என் உருவம் மறைந்து வீட குடாது என்றாய்
நானும் கண் இமைக்காமல் இருக்கின்றன்
என் தெர்யுமா என்னை தவிர வேறு யாரையும்
பார்த்து வீட குடாது என்பதற்க்க .............
என் இதயமும் இமையும்..
ஒரே நேரத்தில் இப்படி துடிக்கிறதே..
ஓஹோ..
என் தெரு முனையில்...
உன் காலடி பட்டு விட்டதோ..

ஆசை

வட்ட நிலவிற்கு தமிழ் கற்று கொள்ள ஆசை
காரணம் என்ன என்றால் _ அவள் அழகை
வர்ணிக்க மொழி ஒன்று தேவை என்பதால்

Friday, August 28, 2009

வாழ்கை(ரோஜா பூ)

மொட்டு எனும் மகளாய் பிறந்து
அழகு எனும் மங்கையாய் வளர்ந்து
பூஜை எனும் புனிதத்துடன் கலந்து
இறைவன் தம் உள்ளதை மகிழ்வித்து
உஷ்ணம் எனும் அன்பால் வாடி(மடிந்து)
குப்பை எனும் அடக்கத்தை பெறுகிறாய் !!!!!!!

'க‌ண்ணீர்'

மனம் கசந்தால்
கரிக்கும் தண்ணீர்

'க‌ண்ணீர்'

மனம் கசந்தால்
கரிக்கும் தண்ணீர்

நட்பு!!!

உன் கண்கள் வழியே
அலைகளாகப் பாய்ந்து வரும் சோகம்...
என் கண்களில் அருவியாக கொட்டுகின்றதே
அது தான் நம் நட்பு!!!
அவ் வானம் அழுதால் -
மண்ணில் மழை பெய்யும் !!!
என் உயிரெ நீ அழுதால் -
மண்ணில் என் உயிர் மடியும் !!!
நான் ...........
மேகத்தில் அனுப்பி வைத்தேன் தூது....
காற்று அதை மொழி பெயர்த்தது....
மனழயாக.............

Tuesday, August 25, 2009

எனது கிறுக்கல்கள்

மழை
வானம் விடும் கண்ணிரே
மழையகும்
அது சோகத்தில் விடும் கண்ணீர்
கன மழையகும்
சந்தோஷத்தில் விடும் ஆனந்த கண்ணீர்
சாரல் மழையகும்