Sunday, May 2, 2010

உறங்க செய்

என் விழியில் உறக்கம் மறந்து
நெடு நாள் ஆகி விட்டது _நான்
உறங்க வேண்டுமானால் ஒன்று செய் அன்பே
உன் விழியால் என்னை வருடி விடு போதும்
கண் அயர்ந்து விடுவேன் .......

Friday, April 30, 2010

நட்பாகவே

மலர்கள் மலர்வது உதிர்வதெற்கு என்றால்
மலர்கள் மலராமலே இருக்கட்டும்
காதலால் பிரிவு உண்டென்பதால்
காதலாய் இல்லாமல் நட்பாகவே இருக்கட்டும்

தோற்று விடுவாய்

உன்னை மறந்தேன் என்றால்
என் சுவாசம் மறந்தேன் _உன்னுள்
நான் இருப்பது உண்மை என்றால்
என்னுள் நீ எப்போதும் இருப்பாய்
சோதித்து பார்க்காதே தோற்று விடுவாய்

Tuesday, February 16, 2010

பெண்
பெண் உருகும் மெழுகு மட்டும் அல்ல
அவள் குமுறும் எரிமலை
அன்புக்கு மட்டுமே கட்டு படுவாள்
அதிகாரத்தால் அவளை ஒன்றும் செய்ய முடியாது
அதிகாரத்தால் ஆளுமை படுத்த எண்ணினால்
அந்த தாய்மைய்ல ஆண்மை உண்டு என்று உணர்த்துவாள்